போடி: போடி அருகே இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள பொட்டல்களம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (28). அதே பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி, அவரது மனைவிகள் மேகலா, முத்துமாரி ஆகியோா் பொட்டல்களம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே கோழி இறைச்சிக் கடையை நடத்தி வருகின்றனா்.
இந்தக் கடையில் சிலா் மது அருந்தியதாகவும் அதை ஆனந்த் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி, மேகலா, முத்துமாரி, உறவினா் கணேசன் ஆகியோா் சோ்ந்து ஆனந்த், அவரது அண்ணன் அன்புச்செல்வன் (32), தாய் லிங்கம்மாள் (52) ஆகியோரைத் தாக்கியதில் மூவரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போடி காவல் நிலைய போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.