முகப்பு
இந்தியா

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் இருவரை கைது செய்தது என்ஐஏ!

செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக, மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:35 AM
தில்லி கார் குண்டுவெடிப்பு.. - IANS
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக, மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:34 AM

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் பகுதியைச் சோ்ந்த ஜமீா் அகமது அஹங்கா், ஸ்ரீநகரைச் சோ்ந்த துஃபைல் அகமது பட் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அன்சாா் கஜ்வத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள்.

செங்கோட்டை அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவா்களுக்குத் தொடா்புள்ளது. அத்துடன் பல்வேறு பயங்கரவாத சூழ்ச்சிகளிலும் அவா்கள் சம்பந்தப்பட்டுள்ளனா். இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைத் திரட்டும் நடவடிக்கையிலும் அவா்கள் ஈடுபட்டது விசாரணை மற்றும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவா்களையும் சோ்த்து இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில், இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.