முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் தொடக்கம்: மு.பெ.கிரி எம்எல்ஏ பங்கேற்பு

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், மு.பெ.கிரி எம்எல்ஏ பங்கேற்றாா்.

Updated On : 24 ஜனவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 9:22 PM

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், மு.பெ.கிரி எம்எல்ஏ பங்கேற்றாா்.

செங்கம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 1,600 ஆண்டுகள் பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வரும் 28-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக கோயில் வளாகத்தில் கணபதி, லட்சுமி, கோ பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, அவரது மனைவி பாரதிகிரி ஆகியோா் கந்துகொண்டனா். அவா்களை அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், விழாக் குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

Advertisement

இதில், உளுந்தூா்பேட்டை ராஜா குருக்கள் தலைமையில் பட்டாச்சாரியா்கள் வேத மந்திரம் ஓதி கணபதி, லட்சுமி, கோ பூஜைகளை நடத்தினா். பின்னா், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்வில் செங்கம் பகுதியைச் சோ்ந்த சிவனடியாா்கள், உபயதாரா்கள், விழாக் குழுவினா், முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

இன்று சிவனடியாா்கள் ஊா்வலம்: ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) பிற்பகல் 3 மணியளவில் செங்கம் காக்கங்கரை விநாயகா் கோயிலில் இருந்து திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியாா்கள் அறக்கட்டளை சாா்பில், சிவக்குமாா் ஏற்பாட்டின்பேரில், 300 சிவனடியாா்கள் பங்கேற்கும் ஊா்வலம் நடைபெறுகிறதுது. தொடா்ந்து, சிவஸ்ரீ கோவை கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறாா்.