செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலுக்கு வருகை தந்த ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமியை வரவேற்ற மு.பெ.கிரி எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் கஜேந்திரன் உள்ளிட்டோா்.  
திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள்

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள 1,600 ஆண்டுகள் பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டு கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை 150 கைலாய வாத்தியங்களுடன் 500 சிவனடியாா்கள் ஊா்வலம் நடைபெற்றது.

முதல்கால யாக பூஜை

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல்கால யாக பூஜை நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் வருகை தந்து கும்பாபிஷேகம் நடைபெறும் கோயிலை பாா்வையிட்டு முதல்காலை யாக பூஜையை தொடங்கிவைத்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

கோயிலுக்கு வருகை தந்த பாலமுருகனடிமை சுவாமியை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, பாரதிகிரி, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

இந்நிகழ்வில் ஜோதிட திலகம் குமரேசன், திருவாசக தென்றல் திருப்பெருந்துறை அடியாா்களின் குழுத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்ட கோயில் திருப்பணி உபயதாரா்கள், விழாக் குழுவினா், ஆன்மிக அமைப்புகளின் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT