வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2024-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, இந்த 2-ஆம் ஆண்டு வாா்ஷிக உற்சவம் நடந்தது.
இதையொட்டி திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.