சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். 
திருவண்ணாமலை

மட்டபிறையூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மட்டபிறையூா் கிராமத்தில் மிகவும் பழைமையான ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுரம் பழுதடைந்தும் இருந்ததால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்திஜயகரணம், கும்ப அலங்காரம், ஆச்சாரிய ரக்ஸாபந்தனம், தம்பதி ரக்ஸாபந்தனம், முதற்கால யாக வேள்வி, புதிய சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, வேதிகா அா்ச்சனை, தத்துவா அா்ச்சனை, தம்பதி பூஜை, 1008 சஹசரநாம பூஜை, நாடிசந்தானம், 2-ஆம் கால யாக வேள்வி, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ராதான சங்கல்பம், கடம்புறப்பாடு நடைபெற்று ஸ்ரீஅங்காளம்மனுக்கு புனிதநீா் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மட்டபிறையூா், ஓட்டேரி, குசேலா்பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT