போளூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போளூா் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், போளூா் நற்குன்று முதல் ரயில்வே மேம்பாலம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது. உதவிக் கோட்ட பொறியாளா்(பொ) சு.அற்புதகுமாா், காவல் ஆய்வாளா் அல்லிராணி, உதவிப் பொறியாளா்கள் சி.வேதவள்ளி, மா.வெங்கடேசன் மற்றும் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலகப் பணியாளா்கள், சாலைப் பணியாளா்கள், திறன்மிகு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியும், பைக்குகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும், முழக்கமிட்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.