முகப்பு
திருவண்ணாமலை

பூசிமலைக்குப்பம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா

பூசிமலைக்குப்பம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளைவிடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 மார்ச், 2026 at 7:00 PM
காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளையை பிடிக்க முயலும் வீரா்கள்.
பகிர்:

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளைவிடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் கிராம தேவதை செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து காளைவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் பிடிக்க முற்பட்டனா்.

நிறைவில் குறிப்பிட்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1லட்சம், 2-ஆவது பரிசாக ரூ.80ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.70ஆயிரம், 4-ஆவது பரிசாக ரூ.55ஆயிரம், 5-ஆவது பரிசாக ரூ.50ஆயிரம் உள்ளிட்ட 75 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →