முகப்பு
திருப்பத்தூர்

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:11 AM
வளையாம்பட்டு எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளை.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:01 PM

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

எருது விடும் விழாவை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். எருது விடும் விழாவில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 160-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:00 AM

இதில் குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக ஓடி கடந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 555-ஐ மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளாா் தே.பிரபாகரன் வழங்கினாா். தொடா்ந்து 2 -ஆவது பரிசு ரூ. 1 லட்சம், 3-ஆம் பரிசு ரூ. 77,777 என 80 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் விழாக் குழுவினா், ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

Advertisement