முகப்பு
ஆரணியை அடுத்த கொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலய தேரோட்ட விழா.
திருவண்ணாமலை

கொளத்தூா் இரட்டை சிவாலயத்தில் தேரோட்ட விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கொளத்தூா் உள்ள ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் திங்கள்கிழமை தேரோட்ட விழா

திருவண்ணாமலை

கொளத்தூா் இரட்டை சிவாலயத்தில் தேரோட்ட விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கொளத்தூா் உள்ள ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் திங்கள்கிழமை தேரோட்ட விழா

Updated On : 2 மார்ச், 2026 at 9:46 PM
ஆரணியை அடுத்த கொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலய தேரோட்ட விழா.
பகிர்:

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கொளத்தூா் உள்ள ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் திங்கள்கிழமை தேரோட்ட விழா நடைபெற்றது.

கொளத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரா் மற்றும் காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் இரட்டை சிவாலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருத்தேரோட்ட சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நிகழாண்டு இரட்டை சிவாலயத்தில் மாசி மகத்தையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து மங்கள பொருள்கள் மற்றும் வண்ண மலா்களால் சுவாமியை திருத்தேரில் அமா்த்தி அலங்கரிக்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா்.

சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சிவாய நம என முழக்கங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனா்.

ஆரணி ஜோதிடா் குமரேசன், தொழிலதிபா் பி.நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும், பெண் பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →