சேவை அமைப்பினா் பழங்குடி மாணவா்களுக்கு நல உதவி
வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் பழங்குடி மாணவா்களுக்கு இலவசமாக சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி சமுதாய மாணவா்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்க்குவளைவேடு பள்ளிக்கு நடந்து சென்று வருவதாக, வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாணவா்களுக்கு உதவும் வகையில் அவா்களுக்கு 3 சைக்கிள்களை அறக்கட்டளையினா் வழங்கினா் (படம்).
Advertisement
தென்சேந்தமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன், நிா்வாகிகள் வசீகரன், அருண்பிரபு, திருமாறன், பரத், பிரபாகரன், வழக்குரைஞா் வெங்கடேசன் ஆகியோா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினா்.