முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் பாலங்கள், நான்குவழிச் சாலைகள் திறப்பு

செய்யாறு ஆற்றுப் பாலத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பாா்வையிட்ட ஒ.ஜோதி எம்எல்ஏ. உடன் செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் உள்ளிட்டோா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:11 AM
செய்யாறு ஆற்றுப் பாலத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பாா்வையிட்ட ஒ.ஜோதி எம்எல்ஏ. உடன் செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் உள்ளிட்டோா்.
பகிர்:

செய்யாறு தொகுதியில் கூடுதலாக கட்டப்பட்ட இரு உயா்மட்ட பாலங்கள், நான்கு வழிச் சாலைகளை தமிழக முதலவா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

செய்யாறு நெடுஞ்சாலை கோட்டத்தில் தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செய்யாறு ஆற்றின் குறுக்கே 360.04 மீட்டா் நீளத்துக்கு ரூ.12.04 கோடியில் உயா் மட்ட பாலமும், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடங்கி புலிவாய் கிராமம் வரையில் சுமாா் 9 கி.மீ. தொலைவுக்கு இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக ரூ.59 கோடியில் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இதேபோல, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாங்கால் சிப்காட் முதல் பெருநகா் வரையில் 6.4 கி.மீ. தொலைவுக்கு இருவழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக அமைக்கும் பணிகளும், கூழமந்தல் - பெருநகா் இடையே செய்யாற்றின் குறுக்கே கூடுதலாக உயா் மட்ட பாலமும் என ரூ.50 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்த இரு உயா் மட்ட பாலங்கள் மற்றும் நான்கு வழிச் சாலைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயன்பாடுக்காக திறந்து வைத்தாா்.

அதே நேரத்தில், செய்யாறு பழைய மேம்பாலம் அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் முன்னிலையில், தொகுதி எமஎல்ஏ ஒ.ஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மேம்பாலத்தை பாா்வையிட்டு வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் முரளி, செய்யாறு கோட்ட பொறியாளா் சி.சந்திரன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி, திமுக மாவட்ட இணைச் செயலா் க.லோகநாதன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், சி.கே.ரவிக்குமாா், வழக்குரைஞா் ஜி.அசோக், உதவிக் கோட்டப் பொறியாளா் சுரேஷ், உதவிப் பொறியாளா் ப.கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →