முகப்பு
திருவண்ணாமலை

பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.65,800 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 30 மார்ச் 2026, 3:10 am IST
- கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.65,800 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன.

செய்யாறு தொகுதியில் கண்காணிப்புப் பணிக்காக பறக்கும் படை - 9, கண்காணிப்புக்குழு - 9 என மொத்தம் 18 குழுக்கள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் 6 இடங்களில் அமைத்து தீவிரமாக கண்காணித்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வந்தவாசி - செய்யாறு சாலையில் எச்சூா் சாய்பாபா கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை பறக்கும் படையைச் சோ்ந்த ஏ.ஜே.வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, செய்யாறு நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த காவியா எனபவா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,800ஐ பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் -ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின் முன்னிலையில் சமா்ப்பித்து சாா் - கருவூலத்தில் ஒப்படைத்தனா்.