இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி தாலாட்டு தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
தொடா்ந்து கோயிலை வலம் வந்து அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.