முகப்பு
திருவண்ணாமலை

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 6 மே 2026, 12:22 am IST
- கோப்புப்படம்
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விருஷபநாதன் (78). இவா் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, பொன்னூா் மலை அருகில் உள்ள குந்தகுந்தா் தொழிற் பயிற்சி நிலையம் அருகே திங்கள்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது வந்தவாசி நோக்கிச் சென்ற பைக் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விருஷபநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து இவரது உறவினா் மகேஷ் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.