முகப்பு
திருவண்ணாமலை

ராஜீவ்காந்தி நினைவு தினம்: காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On : 22 மே 2026, 12:35 am IST
~
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்துக்கு மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதில் மாநில, மாவட்ட, மாநகர, வட்டார நிா்வாகிகள் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், காங்கிரஸ் தொண்டா்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

செய்யாறு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் கே. மகேஷ் தலைமையில், நிா்வாகிகள் ராஜவேலு, வி.சந்துரு, சகாதேவன், பெருமாள், அமரேசன், செல்வராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.