வேலூர்

ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் பல்லுயிர் பெருக்கம் போட்டிகள்

தினமணி

வேலூர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியின் வைரவிழாவையொட்டி விலங்கியல் துறை சார்பில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.

கருத்தரங்குக்கு சமூக ஆர்வலர் கிருஷ்ண மனோகர் தலைமை தாங்கி பேசினார் .

கல்லூரிச் செயலர் அமலா சாமலா, கல்லூரி முதல்வர் யூஜினி பாத்திமா மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை முதல்வர் மேரி ஜோஸ்பின் ராணி கருத்துரை வழங்கினார்.

பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வினா விடை போட்டி யில் ஆக்சிலியம் கல்லூரி மாணவியர் அஸ்வினி, திவ்யபிரியாவும், ரங்கோலியில் ஆக்சிலியம் கல்லூரி அந்தோனி, எழில் ராணி குழுவினரும், உபயோகமற்ற பொருள்களின் உபயோகங்கள் கருத்துரையில் ஆக்சிலியம் கல்லூரி மாணவி வைஷ்ணவியும் பரிசு பெற்றனர்.

முகச்சித்திரம் கைவண்ணத்தில் ஆக்சிலியம் கல்லூரி மாணவி அமலியா, களிமண் கைவண்ணம் மற்றும் கட்டுரைப் போட்டி மற்றும் படக்காட்சியில் ஊரிசு கல்லூரி லிடியா ஆகியோர் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

விழாவில் விலங்கியல் துறை பேராசிரியை கெனலி கிறிஸ்டி டீனா, பேராசிரியர் லின்சே பிரிசில்லா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கருத்தரங்கை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT