வேலூர்

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

ஆம்பூரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

எம். அருண்குமார்

ஆம்பூரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆம்பூர் பேருந்து நிலையம், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. நகருக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நகரமாக ஆம்பூர் திகழ்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அனைத்துப் பேருந்துகளும் ஆம்பூர் பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன. எனினும், வாணியம்பாடி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று சென்று கொண்டிருந்தன.

அவ்வப்போது, போலீஸார் போக்குவரத்தை சரி செய்யும்போது மட்டும் அப்பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன. பிறகு, வழக்கம்போல தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று சென்றன.

தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதால் வாணியம்பாடி மார்க்கமாக திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன.

தற்போது, ஆம்பூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், சென்னை செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை மட்டுமே ஆம்பூர் பேருந்து நிலையத்துக்குள் சென்று வருகின்றன.

வாணியம்பாடி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்காக பயணிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. கடுமையான வெயிலின்போதும், மழைக் காலங்களிலும் ஒதுங்கி நிற்க இடமில்லாமல் பயணிகள் பெரிதும் அவதியுறுகின்றனர்.

இதனால் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும், பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆம்பூர் ரயில் நிலைய வளாகம் இருப்பதாலும், 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்த பிறகு தேசிய நெடுஞ்சாலையில் இடம் இல்லாததாலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

எனினும், இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டுமென்று பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேருந்து நிலையத்துக்குள் வாணியம்பாடி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் செல்ல முடியாததாலும், பயணிகள் நிழற்குடை இல்லாததாலும் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே கால்கடுக்க நின்று பேருந்துக்காக காத்திருக்கும் நிலை நிலவுகிறது.

இதனால் குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் சில இடங்களில் பயணிகள் வசதிக்காக பேருந்து நின்று செல்வதற்காக அணுகுச் சாலையிலேயே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. ஆம்பூரிலும் அதேபோன்று அணுகுச் சாலையில் மேற்கூரை அமைக்க வேண்டுமென்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT