வேலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், சக்கர நாற்காலி

DIN

வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலி, விவசாயிகளுக்கு நவீன வேளாண் இயந்திரங்கள், தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலிகளை மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
வழங்கினார்.
47 பேருக்கு விலையில்லா ஸ்கூட்டர், 30 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி உள்பட 165 பயனாளிகளுக்கு ரூ. 87 லட்சத்து 4 ஆயிரத்து 630 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புலட்சுமி, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர் பி.வாசுதேவ ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT