வேலூர்

விபத்துக்குள்ளான மினி வேனில் இருந்து செம்மரக் கட்டைகள் பறிமுதல்

DIN

ஆற்காடு அருகே விபத்துக்குள்ளாகி நின்ற வேனில் இருந்து 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 ஆற்காட்டை அடுத்த சின்னதக்கை கிராமத்தில், ஆற்காட்டு- கண்ணமங்கலம் சாலையில் மினிவேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திமிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்துக்குள்ளான வேனில் யாரும் இல்லாததால் வேனை சோதனையிட்டனர்.  அப்போது, வேனில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT