வேலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

DIN

அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் குமரன்(38). தனியார் கார் ஓட்டுநர். இவர், திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வேலூர் சென்றார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை குமரன் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி
யடைந்தார்.  உள்ளே பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது
தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT