வேலூர்

வேளாண் அலுவலர்களுக்கான மண்டல பணிமனைக் கூட்டம்

DIN

வேலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்களுக்கான தொழில்நுட்பம் குறித்த மாதாந்திர மண்டல பணிமனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வேளாண் இணை இயக்குநர் வாசுதேவரெட்டி தலைமை வகித்தார். விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் பேராசிரியர் பாண்டியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா டேவிட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்துறை துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) சத்தியமூர்த்தி வரவேற்றார்.   
இதில், புதுவரவு நெல், துவரை பயிர்களை விவசாயிகள் நடச் செய்வது, நிலக்கடலைப் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குநர்கள், அலுவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT