முகப்பு
வேலூர்

முன்னாள் எம்.பி.  மார்கபந்து மறைவு

வேலூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். மார்கபந்து வேலூரில் வியாழக்கிழமை காலமானார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

வேலூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். மார்கபந்து வேலூரில் வியாழக்கிழமை காலமானார்.
வேலூர் கீழ்மொணவூரைச் சேர்ந்தவர் ஆர்.மார்கபந்து (84), சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர், அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.  
இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கு வேலூர் பாலாற்றங்கரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →