வேலூர்

ஆம்பூரில் பொதுமக்கள் மீது தடியடி: தமாகா கண்டனம்

DIN

ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு தமாகா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் கே.குப்புசாமி கூறியதாவது:
இச்சம்பவத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்ட தமாகா கண்டனம் தெரிவிக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, ஆண் போலீஸார் அடித்து விரட்டுகின்றனர்.
இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மதுக் கடைக்கு எதிராகப் போராடும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்களைத் தாக்கிய போலீஸாரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT