வேலூர்

மினி லாரியுடன் எரி சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ஆம்பூர் அருகே மினி லாரியில் 1,750 லிட்டர் எரி சாராயம் கடத்தியதாக முதியவர் ஒருவரை கலால் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், மாதனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக வாணியம்பாடி கலால் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆம்பூர் அருகே மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையில் கலால் பிரிவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் சுமார் 1,750 லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரியவந்தது. அப்போது லாரி ஓட்டுநரும், உடனிருந்த நபரும் தப்பியோடி தலைமறைவாயினர். இதையடுத்து, லாரியில் இருந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகுந்தனை (60) போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி கலால் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT