ஐஎன்எஸ் ராஜாளியில் நுழைந்த நேபாள நாட்டவர் கைது
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் அத்துமீறி நுழைந்த நேபாள நாட்டவரை, விசாரணைக்குப் பிறகு அரக்கோணம் நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேலூர்ஐஎன்எஸ் ராஜாளியில் நுழைந்த நேபாள நாட்டவர் கைது
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் அத்துமீறி நுழைந்த நேபாள நாட்டவரை, விசாரணைக்குப் பிறகு அரக்கோணம் நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் அத்துமீறி நுழைந்த நேபாள நாட்டவரை, விசாரணைக்குப் பிறகு அரக்கோணம் நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அரக்கோணம் நகரையொட்டி அமைந்துள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் கடந்த 30-ஆம் தேதி இரவு அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற நபரை விமானதள பாதுகாப்புப் படையினர் பிடித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் நேபாள நாட்டைச் சேர்ந்த பிரதாப் ராணா சிங் (37) என்பது தெரியவந்தது. அவரிடம் மத்திய உளவுப் பிரிவு, பாதுகாப்புத் துறை அமைச்சக தனிப் பிரிவு, தமிழக காவல் துறை எஸ்பிசிஐடி, கியூ பிரிவு, மாவட்ட போலீஸார் என உயரதிகாரிகள் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தின் உண்மை தன்மையை அறிய பிரதாப் ராணா சிங் கூறியதன் அடிப்படையில் அவ்விடங்களுக்கு தனிப்படை போலீஸார் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை பிரதாப் ராணா சிங்கை அரக்கோணம் நகர போலீஸார் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவரை வியாழக்கிழமை மாலை அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.