முகப்பு
வேலூர்

சாலையில் கழிவுநீர்:வியாபாரிகள் மறியல்

குடியாத்தம் அருகே சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி வியாபாரிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

குடியாத்தம் அருகே சாலையில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி வியாபாரிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் சித்தூர்கேட்டில், கால்வாய் இல்லாததால் அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது.
இதனால் அங்கு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் சித்தூர்கேட்டில் உள்ள வியாபாரிகள் குடியாத்தம்-பலமநேர் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி. சங்கர், நகர போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →