முகப்பு
வேலூர்

கால்வாயில் குளித்த மாணவர்கள் சாவு

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே கால்வாயில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை இறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே கால்வாயில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை இறந்தார்.
காவேரிபாக்கம் அருகே தருமநீதி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமனின் மகன் வெற்றிமாறன் (10), கங்காதரனின் மகன் போஸ் (10). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர். வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய இருவரும் அப்பகுதியில் உள்ள கட்டக் கால்வாயில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவலறிந்த காவேரிபாக்கம் போலீஸார் அங்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →