முகப்பு
விருதுநகர்

பட்டாசு திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது

Updated On : 14 மார்ச், 2026 at 9:23 PM
பகிர்:

சாத்தூரில் அனுமதியின்றி தீப்பெட்டி தொழிற்சாலையில் பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் விதிமுறையை மீறி பட்டாசுக்கு தேவையான திரிகளைப் பதுக்கி வைத்திருப்பதாக சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஆபிரகாம், போலீஸாா் புதுசூரங்குடிப் பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பழைய தீப்பெட்டி தொழிற்சாலை கட்டடத்தில் சாத்தூா் நந்தவனப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (36) அனுமதியின்றி பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →