முகப்பு
வேலூர்

குத்துச் சண்டையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

குத்துச் சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

குத்துச் சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூவர் பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் மண்டல அளவில்  கடலூர் மாவட்டம், விருதாசலத்தில் குத்துச் சண்டை போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 20 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியை சேர்ந்த பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு மாணவர்  மோகன்லால் 64-69 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் ஆண்டு கணினி பிரிவு மாணவர் தேவேந்திரன் 49-52 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள  பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற உள்ள தேசிய போட்டிகளுக்கு  தகுதி பெற்றுள்ளனர். குத்துச் சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். இதில், பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர்,  மற்றும் துறைத் தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →