முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வதைக்கும் வங்கிகள்!

கடன் அல்லது வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு, காப்பீட்டு பாலிசிகளை வாங்குவது கட்டாயம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது

Updated On : 13 மார்ச், 2026 at 10:38 PM
கோப்புப் படம்
பகிர்:

-ஆறு. சுப்பிரமணியன்

"கடன் அல்லது வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு, காப்பீட்டு பாலிசிகளை வாங்குவது கட்டாயம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது, அவ்வாறு பாலிசிகளை (காப்பீட்டுத் திட்டங்களை) வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் விற்பது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்படி குற்றம்' என்ற எச்சரிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் விடுத்திருக்கிறார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு ரிசர்வ் வங்கியினருடன் பிப்.23-இல் நடத்திய அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே இந்த எச்சரிக்கையை வங்கிகளுக்கு பகிரங்கமாக விடுத்தார்.

இதை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அமைச்சர் வங்கிகளுக்கு விடுத்துள்ள வழக்கமான ஓர் அறிவுறுத்தல் போலத்தோன்றும். ஆனால், இந்த எச்சரிக்கையின் பின்புலம் சற்று கடினமான பாதிப்புகளால் எழுந்தது என்பதே உண்மை.

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை அளிக்கும் அமைப்புகள் என்ற நியாய வரம்பைத் தாண்டி, காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்களாக மாறி, காப்பீட்டுத் திட்டங்களை வலிந்து வாடிக்கையாளர்களிடம் திணித்து விற்று, அதன்மூலம் பெருந்தொகையை ஆதாயமாக (கமிஷன்) பெற்று லாபமடைந்துள்ளன. ஆனால், பாலிசிகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் கடும் நிதியிழப்புக்கு உள்ளாகி அரசுக்கும், ஐஆர்டிஏ எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கும் அனுப்பிய புகார்கள்தான் இந்த எச்சரிக்கைக்கு முக்கியக் காரணம்.

2024-25-ஆம் நிதியாண்டு தரவுகள்படி, இந்திய அளவில் ஐஆர்டிஏ-விடம் காப்பீட்டு பாலிசிகள் தொடர்பாக 2.5 லட்சம் நுகர்வோர் புகார்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில், 1.2 லட்சம் புகார்கள் ஆயுள் காப்பீடு பாலிசிகள் வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வலிந்து விற்கப்பட்டவை.

"மிஸ் செல்லிங்க்' எனப்படும் இத்தகைய பாலிசிகள் விற்பனை 2024-25-இல் மட்டும் வங்கிகள் மூலமாக 18 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1,665 வங்கி வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர்களிடம் நடத்தப்பட்ட தரவு ஆய்வில் இத்தகைய தவறான பாலிசி விற்பனைகளை விற்றதை 57 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எதற்காக இந்த விற்பனை நடைபெறுகிறது என்றால், வீடு, வாகனம் வாங்குதல், சொத்து அடமானம், தனிநபர் கடன் போன்றவற்றுக்காக கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளை நாடும்போது, அவர்களை வங்கி அதிகாரிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள், தொடக்க நிலையிலேயே இத்தகைய பாலிசிகளை வாங்கினால்தான் கடன் கிடைக்கும் என்று நிபந்தனை விதித்து அவர்களை தங்கள் வலைக்குள் விழவைத்து விற்றுவிடுகிறார்கள்.

ரூ.20 லட்சத்துக்கு வீட்டுக்கடன் வாங்கும் ஒரு நபருக்கு அதே தொகைக்கு காப்பீடு பாலிசி விற்கப்படுகிறது. இந்தக் காப்பீடுக்கான பிரீமியம் தொகை, பெரும்பாலும் ஒற்றைப் பிரீமியமாக வாங்கப்படுகிறது. வழக்கமான கடனுக்கான மாதத் தவணையுடன், காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் தொகையும் கடன்காலம் முழுமைக்கும் அந்த வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.

கடனை செலுத்தி முடித்தால் இந்தத் தொகை (சில திட்டங்கள் தவிர்த்து) பெரும்பாலும் திரும்பக் கிடைக்காது. கடனாளி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், கடன் தொகையை இந்த பாலிசிகளால் ஈடுசெய்து, வாரிசுகளுக்கு சொத்து சென்றடையும் என்று வங்கிகள் தரப்பில் உறுதியளிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறான சூழ்நிலை, வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்கள் பலன் அடைந்ததா என்றால், அது சொற்ப அளவாகவே உள்ளது. இந்த வகை பாலிசி விற்பனை அல்லாமல், மூத்த குடிமக்கள், நிரந்தர வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள், ஓய்வுகால நிதி சேமிப்பு வைத்திருப்பவர்களின் தரவு களைச் சேகரித்து அவர்களை வங்கிப் பிரதிநிதிகள் வலிந்து தொடர்புகொண்டு 25 சதவீதம் வரை ஆண்டுக்கு வருவாய் வரும் என்று பொய்யான வாக்குறுதியளித்து, அவர்களை உடன்பட வைத்து அவர்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து பெருந்தொகையை பாலிசி பிரீமியமாக வங்கிகள் எடுத்து பாலிசிகளை விற்பது மற்றொரு வகையான தவறான நிதிச் சேவையளிப்பு நடவடிக்கையாகும்.

இப்படித்தான் அண்மையில் முதியவர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 110 ஆண்டு காத்திருப்புகால முதிர்ச்சியுடன் பாலிசி விற்கப்பட்டுள்ளது. அவரோ முதுமையின் இறுதியில் இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் பெருந்தொகை காப்பீடு என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டது. இதையறிந்த குடும்பத்தினர் வங்கியை நாடி பெரும் சிரமப்பட்டு பாலிசியை ரத்து செய்துள்ளனர். ஆனால், அவர் செலுத்திய பெருந்தொகையின் பெரும்பங்கு திரும்பக் கிடைக்கவில்லை. இப்படியான நிதியிழப்புகள் பல மூத்த குடிமக்களுக்கு நிகழ்ந்துள்ளது என்பது தரவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இப்படியான பல பாதிப்புகளின் தொடர் புகார்களால்தான் நிதியமைச்சர் வங்கிகளை கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே, தவறான தகவல்களைக் கூறி காப்பீட்டுத் திட்டங்களை வங்கிகள் விற்பதைக் கட்டுப்படுத்த, பிப்ரவரி 11-ஆம் தேதி ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கான வரைவு விதிகள் மீது பொதுமக்களிடம் மார்ச் 4-ஆம் தேதி வரை கருத்துகள் பெறப்பட்டன.

நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது இந்தச் சட்டம். இந்த சூழலில்தான் நிதியமைச்சரின் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த வரைவு விதிக்கான கருத்துப் பதிவுகளை அனைத்து மக்களும் ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பித்து வரவிருக்கும் சட்டத்தை வலுவாக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →