வேலூர்

டெங்கு கொசு ஒழிப்பு, சுகாதாரப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN

ஆலங்காயம் ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு, சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் ஆட்சியர்  செவ்வாய்க்கிழமை ஆய்வு
செய்தார்.
அப்போது அவர், வீடு, வீடாகச் சென்று சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வது குறித்தும், தூய்மைப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, அரசு வேளாண்மை கிடங்கு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட திட்ட அலுவலர் பெரியசாமி, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தி, ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், ஒன்றியப் பொறியாளர் அரசு, ஒன்றிய, ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர். இதே போல, வாணியம்பாடி அரசு பயணியர் விடுதியில் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் கோபுவிடம் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT