வேலூர்

விளைநிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

DIN

ஆம்பூர் அருகே விளைநிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.
ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு ஊராட்சி, மேல் கொத்தக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜுக்குச் சொந்தமான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. செவ்வாய்க்கிழமை நெல் அறுவடை செய்யும் பணியில் ஆண்களும், பெண்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனவர் செந்தில்,  வனக்காப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பைப் பிடித்து பல்லலக்குப்பம் காப்புக் காட்டில் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT