வேலூர்

விளைநிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

DIN

ஆம்பூர் அருகே விளைநிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது .
ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு ஊராட்சி, மேல் கொத்தக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜுக்குச் சொந்தமான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. 
செவ்வாய்க்கிழமை நெல் அறுவடை செய்யும் பணியில் ஆண்களும், பெண்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள்கூச்சலிட்டனர். 
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனவர் செந்தில், வனக்காப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பைப் பிடித்து பல்லலக்குப்பம் காப்புக் காட்டில் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT