கே.வி. குப்பத்தில் 45 பேருக்கு உதவி
காட்பாடி வட்டம், கே.வி. குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காட்பாடி வட்டம், கே.வி. குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு துணை ஆட்சியர் ராஜன் தலைமை வகித்தார். எம்எல்ஏ ஜி. லோகநாதன் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
காட்பாடி வட்டாட்சியர் பாஸ்கரன், தனி வட்டாட்சியர் நரசிம்மன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் பிரியா நன்றி கூறினார்.
மேல்பட்டியில்...
குடியாத்தம், நவ.15: பேர்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்து, 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வட்டாட்சியர் பத்மநாபன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் விஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கரீம், வட்ட வழங்கல் அலுவலர் அம்ருன்னிஸா, வருவாய் ஆய்வாளர்கள் வடிவேல், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.