முகப்பு
வணிகம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் தாங்கும்! அறிமுகமானது போக்கோ சி85 எக்ஸ்!

சமூக வலைதளத்தை 20 மணி நேரம் பயன்படுத்தலாம், 14 மணிநேர கேம் விளையாடும் அனுபவத்தைப் பெறலாம் என போக்கோ நம்பிக்கை...

Updated On : 10 மார்ச், 2026 at 6:03 PM
போக்கோ சி85 எக்ஸ் - படம் / நன்றி - போக்கோ
பகிர்:

போக்கோ சி85 எக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மார்ச் 10) அறிமுகமானது.

இதுவரை இல்லாத வகையில் அதிக பேட்டரி திறனுடன் (6,300mAh) கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போக்கோ நிறுவனம், குறைந்த விலையில் நிறைவான அம்சங்களுடன் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

Advertisement

அந்தவகையில் தற்போது பேட்டரி திறனுக்கும் கேமராவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து போக்கோ சி85 எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை போக்கோ அறிமுகம் செய்துள்ளது.

போக்கோ சி85 எக்ஸ் சிறப்பம்சங்கள்

  • 6,300mAh பேட்டரி திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் என போக்கோ கூறுகிறது.

  • விடியோவை தொடர்ந்து 35 மணிநேரங்களுக்கு பார்வையிடலாம் என்றும், 20 மணி நேரம் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தலாம், 14 மணிநேர கேம் விளையாடும் அனுபவத்தைப் பெறலாம் என போக்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  • 6.9 அங்குல திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆக்டா யூனிசாக் டி8300 6nm புராசஸர் உடையது.

  • ஷாவ்மி ஹைப்பர் ஓஎஸ் இயங்குதளம் கொண்டது.

  • கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் பின்புறம் 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 8MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  • நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக IP52 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதன் எடை 210 கிராம்.

  • கருப்பு, பச்சை மற்றும் தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்.

  • இத்தனை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,999.

summary

Poco C85x 5G launched in India under Rs 15000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.