நீண்ட நேர பேட்டரி பயன்பாடு! பயனர்களை ஈர்க்கும் ஐக்யூ இசட் 11 சிறப்புகள் என்னென்ன?
பயனர்களை வெகுவாகக் கவர்ந்து வரும் ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து...
ஐக்யூ நிறுவனத்தின் இசட் 11 ஸ்மார்ட்போன் பயனர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குறைந்த விலையில், அதிக நேர பேட்டரி பயன்பாட்டை எதிர்பார்க்கும் பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
200 சதவிகித அல்ட்ரா சவுண்ட் ஸ்பீக்கர், செய்யறிவு வசதிகளுடன் ஐக்யூ இசட் 11 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ இசட் 11 சிறப்பம்சங்கள்
Advertisement
Advertisement
ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போன் 6.74 அங்குல தொடுதிரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120 ஹெர்ட்ஸ் திறன் கொண்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1200 நிட்ஸ் திறன் வழங்கப்பட்டுள்ளது.
செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
128 ஜிபி மற்றும் 256 ஜிபி நினைவக வசதியுடன் 1 டிபி வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்ய முடியும்.
50 மெகா பிக்சல் சோனி லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்கான முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு கைரேகை சென்சார், 200 சதவிகித அல்ட்ரா சவுண்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
Long-lasting battery! What are the features of the iQOO Z11 that attract users
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.