FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விலை அதிரடி சரிவு!

அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது குறித்து...

8 செப்டம்பர் 2026, 6:12 pm IST
ஐக்யூ 15 - படம் / நன்றி - ஐக்யூ
பகிர்:

அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி மேலும் சில வங்கிக் கடன் அட்டைகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேம் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்த ஐகியூ நிறுவனம், அதீத பயன்பாட்டிற்காக ஐக்யூ 15 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் உண்மையான விலையில் இருந்து ரூ. 9,000 அமேசானில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 76999-க்கு இந்த ஸ்மார்ட்போனை பெறலாம்.

மேலும், ஐசிஐசிஐ வங்கிக் கடன் அட்டைகளுக்கு கூடுதலாக ரூ. 2,309 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 75,000-க்கு ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை பெற முடியும்.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி பழைய ஸ்மார்ட்போனை (எஜ்ஸ்சேஞ்ச்) மாற்றிக்கொள்வதன் மூலம் ரூ. 31,800 வரை விலையில் தள்ளுபடி பெறலாம். இதற்கு சில நிபந்தனைகளும் வகுக்கப்பட்டுள்ளன. வேலை செய்யும் திறன், வாங்கிய ஆண்டு உள்ளிட்டவற்றைக்கொண்டு சலுகை விலையில் மாற்றங்கள் இருக்கலாம்.

வாரண்டியுடன் ஸ்க்ரீன் புரொடக்‌ஷன் காலமும் முடிவடையாமல் இருந்தால் சலுகை விலை மேலும் அதிகரிக்கும். இதனால் இன்னும் குறைவான விலையில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை பெறலாம்.

ஐக்யூ 15 சிறப்பம்சங்கள்

  • 6.85 அங்குல சாம்சங் 2கே ஓஎல்இடி திரை கொண்டது.

  • ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை சிப்செட் உடையது.

  • 7,000mAh பேட்டரி திறன். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 40W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கேமரா பிரியர்களுக்காக பின்புறம் 50 மெகாபிக்சல் சோனி கேமரா, 50 மெகா பிக்சல் ஆப்டிகல் டெலிபோட்டோ கேமரா, 500 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன.

  • செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • தூசி மற்றும் நீர்புகாத்தன்மைக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

summary

iQOO 15 smart phone price drops on Amazon, available for under Rs 75,000 with bank offer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments