முகப்பு
வேலூர்

தொடர் திருட்டு: 4 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது

அரக்கோணம் நகரில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக 17 வயதுடைய 4 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அரக்கோணம் நகரில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக 17 வயதுடைய 4 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். 
அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மைக் காலங்களாக பல இடங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. 
இதுகுறித்து டி.எஸ்.பி. குத்தாலிங்கத்தின் உத்தரவின் பேரில் நகர ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில்,  அரக்கோணம் நேருஜி நகரைச் சேர்ந்த மோகன்பாபு (20), அசோக் நகரைச் சேர்ந்த சதீஷ் (21), லோகேஷ்குமார் (18), பிரதீப் (18), பெரியார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (20) மற்றும் இதே பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய 4 சிறுவர்களையும் பிடித்து விசாரித்ததில் நகரின் பல இடங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 
அவர்களிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகள் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →