வேலூர்

தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு  உடல் பரிசோதனை முகாம்

DIN

வேலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச உடல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காட்பாடி சன்பீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பி.சுரேஷ், ராமகிருஷ்ணன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் சுமார் 500 பேருக்கு கண், ரத்தக் கொதிப்பு,  உடல் எடை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் செய்தனர்.
தொடர்ந்து, அவசரக் காலங்களில் வாகனத்தில் பிரேக் பிடிக்காமல் போனால் விபத்து நேரிடாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT