முகப்பு
வேலூர்

மணல் கடத்தல்: 3 லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆற்காடு பகுதிகளில் மணல் கடத்தியதாக 3 லாரிகள், இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

வேலூர்

மணல் கடத்தல்: 3 லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆற்காடு பகுதிகளில் மணல் கடத்தியதாக 3 லாரிகள், இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

ஆற்காடு பகுதிகளில் மணல் கடத்தியதாக 3 லாரிகள், இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 ஆற்காடு வட்டாட்சியர்  சரவணன், திமிரி வருவாய் ஆய்வாளர் ரேணுகா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் காவனூர் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வரகூர் புதூர் பகுதி வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை  மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பாலாற்றிலிருந்து அனுமதியின்றி  மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதனைத்  தொடர்ந்து 3 லாரிகளையும்  பறிமுதல் செய்து திமிரி போலீஸில் ஒப்படைத்தனர்.
 அதேபோல், ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் சக்கரமல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த  2 டிராக்டர்களை சோதனையிட்டதில், பாலாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  டிராக்டர்களை பறிமுதல் செய்து, ஆற்காடு கிராமிய   போலீஸில் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →