வேலூர்

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி

DIN

ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி இருவர் இறந்தனர்.
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவிதாவின் மகள் ஜனனி (11). இவர், அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள சிறுமிகளுடன் ஆலாங்குப்பம் கிராமத்தின் பாலாற்றுக்குச் சென்றாராம். ஆற்றில் விளையாடிய போது திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிறகு, ஜனனி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டார். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (38), ரமேஷ் (28) ஆகிய இருவரும் பச்சகுப்பம்  பாலாற்று தரைப்பாலம் அருகே கடந்த 16-ஆம் தேதி குளிக்கச் சென்றனர். அப்போது பாலாற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், மூர்த்தியை தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டனர். ஆனால், ரமேஷ் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை பச்சகுப்பம் பகுதி பாலாற்றில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT