முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி சாவு

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வியாபாரி இறந்தார்.

வேலூர்

கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி சாவு

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வியாபாரி இறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வியாபாரி இறந்தார்.
ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டியை அடுத்த அனுமந்த கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் வேலு (47). இவர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற வேலு வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது மனைவி கவிதா மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
 வெள்ளிக்கிழமை வக்கணம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே வேலுவின் சட்டையும், காலணியும் கடப்பதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்  தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து, சுமார் 5 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து வேலுவின் சடலத்தை மீட்டனர்.
இதையடுத்து ஜோலார்பேட்டை போலீஸார் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →