முகப்பு
வேலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம்: எம்.பி அரி பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர்

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:42 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர், ராகவேந்திரா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் எம்.பி. கோ.அரி தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியது: நாடாளுமன்றத்தை முடக்கியதாக அதிமுக உறுப்பினர்கள் மீது பழிபோடுகிறார்கள். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தோம். 11 மணிக்கு அவை கூடியபோது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என குரல் கொடுத்தோம். ஆனால் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. அவர்களுடைய நோக்கம் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் மட்டுமே. இதை வைத்து தமிழகப்பிரச்னையை கண்டும்காணாமலும் நடந்து கொண்டதால் தான் ஒரு மாதம் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை நாடாளுமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முடக்குவோம் என்றார் அவர்.
முன்னதாக அரக்கோணம்  எம்எல்ஏ சு.ரவி பேசியது: 
குடியிருப்புகள் நடுவே பூங்காக்கள் உருவாக்கப்படடால்தான் நகரம் மேம்படும். இந்தப் பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டினால்தான் இந்த இடம் அழகாக மாறும். எனவே எம்எல்ஏ நிதி, எம்.பி. நிதி இரண்டிலும் சேர்த்து இப்பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டப்படும். மேலும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படும் என்றார் அவர். 
விழாவில், ராகவேந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். இதில் திருத்தணி நகர்மன்ற முன்னாள் தலைவர் செளந்தரராஜன், அரக்கோணம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பிரவீண்குமார், பிரகாஷ், ஏ.எல்.நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.