வேலூர்

பிரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்

DIN


ஆடி மாத அமாவாசையையொட்டி, ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், தொடங்கிய நிகழ்ச்சியில், மகா சுதர்சன யாகம், சண்டி யாகம், வராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. பின்னர் கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அம்மன் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில், ராணிப்பேட்டை, சுற்று வட்டாரம் மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT