வேலூர்

சாணாத்தியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

DIN

அரக்கோணம் பழனிபேட்டையில் உள்ள சாணாத்தியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணம் பழனிபேட்டையில் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடாவருடம் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வருட ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அம்மன் அலங்கரிக்கப்பட்ட நிலையில், பழனிபேட்டையின் அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா நடைபெற்றது.
 விழாவில், கோயில் தர்மகர்த்தா துரைகுப்புசாமி, திருவிழாக் குழுத் தலைவர் துரைசீனிவாசன், கோயில் நிர்வாகிகள் இ.கெளரிசங்கர், வி.கோவிந்தராஜ், ஆர்.பச்சையப்பன், கே.கிரண்குமார், எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT