வேலூர்

கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் அனுசரிப்பு

DIN

கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான திருநீற்றுபுதன் எனும் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை ராயப்பன் மற்றும் சின்னப்பன் தலைமையில் திருநீற்றுபுதன் திருப்பலி நடைபெற்றது. 
இதில், கலந்து கொண்டவர்களின் நெற்றியில் 40 நாள்கள் நோன்பு தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக குருத்தோலை எரித்த சாம்பல் கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளத்தை பாதிரியார்கள் அடையாளமிட்டனர். 
இதேபோல் வாணியம்பாடி கோணாமேடு சகாயமாத ஆலயம், காமராஜபுரம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT