வேலூர்

லஞ்சம் வாங்கியதாக வங்கி மேலாளர் கைது

DIN

ஆம்பூர் அருகே வங்கிக் கடன் வழங்க மாற்றுத் திறனாளியிடம் லஞ்சம் வாங்கியதாக வங்கி மேலாளரை மத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் தனியார் வங்கிக் கிளை உள்ளது. இக்கிளையின் மேலாளராக ராமநாதன் (52) பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில் பார்சனாபல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பார்த்தீபன் (27) ரூ. 4 லட்சம் கடன் கேட்டு விண்ணிப்பித்தார். இதற்காக வங்கி மேலாளரை பலமுறை அணுகியும் கடன் வழங்காமல் காலதாமதம் செய்து வந்தாராம். 
இந்நிலையில் ரூ. 4 லட்சம் கடன் தொகைக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் கடன் வழங்குவதாக ராமநாதன் கூறியுள்ளார். அதற்கு பார்த்தீபன் தவணை முறையில் கொடுப்பதாகக் கூறியதால் மேலாளர் ராமநாதன் கடன் வழங்க சம்மதம் தெரிவித்தார்.  இதையடுத்து பார்த்தீபன் வங்கியின் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சென்னையில் இருந்து மத்திய லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சோமையா தலைமையில் ஆய்வாளர் முத்துகுமரன் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் அரங்கல்துருகம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். 
முதல் தவணையாக ரூ. 8 ஆயிரத்தைக் கொடுக்க பார்த்தீபன் வங்கிக்குச் சென்றார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் வங்கிக்குள் சென்று வாடிக்கையாளர்கள் போல் அமர்ந்திருந்தனர். வங்கி மேலாளர் நாமநாதன் லஞ்சப் பணத்தைப் பெற்ற போது அவரை போலீஸார் கையும், களவுமாகப் பிடித்தனர். 
பின்னர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும், வங்கி ஊழியர்கள் எவரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் வங்கிக் கதவை பூட்டிவிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தினர். பிறகு மேலாளர் ராமநாதனை போலீஸார் கைது செய்து ஆம்பூருக்கு அழைத்து வந்தனர். ஆம்பூரில் அவர் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனை நடத்திய பிறகு அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT