முகப்பு
வேலூர்

கோ-ஆஃப்டெக்ஸில் சிறப்புச் சலுகை விற்பனை தொடக்கம்

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோ-ஆஃப் டெக்ஸின் வேலூர் மண்டல மேலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். 
காஞ்சிபுரம் மேலாளர் காங்கேயவேலு முன்னிலை வகித்தார். தீபம் கோ-ஆஃப்டெக்ஸ் மேலாளர் சேகர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, கோ-ஆஃப் டெக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், 2 சேலை வாங்கினால், ஒன்று இலவசம் என்ற இந்தச் சலுகை  மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி, அனைத்து விடுமுறை நாள்களிலும் கடை செயல்படும். மேலும், ஒரே ரக துணி வாங்கினால் 20 சதவீத தள்ளுபடியும் உள்ளது. 
கனவு நனவுத் திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் மூலம் ரூ.300, ரூ.500, ரூ.1000 என 9 மாதங்களுக்கு தொடர் தவணை செலுத்தினால் வாடிக்கையாளர்கள் விரும்பும் துணிகளை எடுத்து கொள்ளலாம். அதிலும் 30 சதவீத தள்ளுபடி உண்டு என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →