முகப்பு
வேலூர்

வேலூர் மார்க்கெட்டில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் வேலூர் மார்க்கெட்டில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட எஸ்.பி. பகலவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் வேலூர் மார்க்கெட்டில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட எஸ்.பி. பகலவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
வேலூர் மாநகரின் மையப் பகுதியில் நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. 
இங்கு உள்ளூர் மட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்டம், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வாகனங்களில் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
 இவற்றை வாங்க ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இதேபோல், வேலூர் மண்டித் தெருவில் அதிக வணிக வளாகங்கள் உள்ளதால், அப்பகுதியில் அதிகளவில் ஆள்கள் நடமாட்டம் காணப்படும். 
இப்பகுதியில் செல்லும் பொதுமக்களிடம் செல்லிடப்பேசி, ரொக்கம் வழிப்பறி செய்வது, திருட்டு போன்ற குற்றச் செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நேதாஜி மார்க்கெட், மண்டித் தெரு பகுதியில் கண்காணிப்பு கேராமக்கள் பொருத்தி, கண்காணிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், முதல்கட்டமாக நேதாஜி மார்க்கெட்டில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க மார்க்கெட்டில் தனியாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பகலவன், வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மண்டித் தெருவில் விரைவில் மேலும் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், மொத்தம் 26 கேமராக்களும் செயல்பட்டுக்கு வரும்போது குற்றச் செயல்கள் வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன், ஆய்வாளர்கள் அறிவழகன், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →